• April 29, 2025
  • NewsEditor
  • 0

‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் வந்துவிடுமா?’ – ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, உலகம் முழுக்க இருக்கும் பரபர கேள்வி இது.

‘தக்க நடவடிக்கைகள் எடுப்போம்’ என்று இந்தியா அடுத்தடுத்த காய்களை நகர்த்தி வருகிறது. நேற்று கூட, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து இருந்தார்.

பதிலுக்கு பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்தி வருகிறது.

ராஜ்நாத் சிங்

இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் பேட்டி ஒன்றில், “இப்போதைய சூழலுக்கு தேவைப்படுவதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தி உள்ளோம்.

இந்த சூழலில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதனால், அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் மோதல்போக்கு அதிகரித்துவிட்டது. அதனால், இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளது என்று அரசாங்கத்திடம் பாகிஸ்தான் ராணுவம் தெரியப்படுத்தி உள்ளது.

எங்களுடைய நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தல் வந்தால் மட்டுமே அணு ஆயுதங்தள் பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘இந்தத் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை வேண்டும். நாங்கள் அந்த விசாரணையில் கலந்துகொள்ள தயார்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *