
சென்னை: உழைப்பாளர் தினத்தையொட்டி, மே 1-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது
வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி மூடி வைக்க வேண்டும். அன்றை தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.