
மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் பரேஸ் ராவல். இவர் தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாக செய்து கொண்ட வைத்தியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் கோமியத்தை குடிப்பது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நடிகர் பரேஸ் ராவல் தனது சொந்த சிறுநீரை குடித்ததாகத் தெரிவித்தது அனைவரையும் அதிர வைத்தது. இது குறித்து பரேஸ் ராவல் அளித்துள்ள பேட்டியில், ”ஒரு முறை நான் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டேன். என்னைப் பார்க்க நடிகர் அஜய் தேவ்கன் தந்தை வீரு தேவ்கன் வந்திருந்தார். என்ன நடந்தது என்று கேட்டதற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னேன். உடனே, `காயம் குணமாக நான் ஒரு தீர்வு சொன்னால் அதை கேட்கத் தயாரா?’ என்று கேட்டார். உடனே நானும் சொல்லுங்கள் கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்கு தினமும் காலையில் சொந்த சிறுநீரகத்தை குடிக்கும்படி சொன்னார்.
அனைத்து வீரர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். சிறுநீர் குடிப்பதால் எதுவும் ஆகாது. காலை எழுந்தவுடன் சிறுநீரகத்தை குடிக்கும்படி சொன்னார். மது அருந்துவதை நிறுத்தச்சொன்னார். அதோடு சாப்பாட்டை சரியான நேரத்தில் சாப்பிடும்படி சொன்னார். நான் இறைச்சி மற்றும் புகையிலையையும் நிறுத்திவிட்டேன். சிறுநீரை குடிக்கும்போது ஒரே மடக்கில் குடித்துவிடக்கூடாது என்றும், பீர் குடிப்பது போன்று அனுபவித்து குடிக்கவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொன்னபடி 15 நாள் குடித்தேன். அதன் பிறகு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எனது காயம் குணமாகி இருந்தது. டாக்டர்களே ஆச்சரியப்பட்டனர். வழக்கமாக இந்த காயம் குணமாக 2 முதல் 2.5 மாதங்கள் பிடிக்கும். ஆனால் எனது காயம் ஒன்றரை மாதத்திற்குள் குணமாகியிருந்தது. இதில் அதிசயம் நடந்திருந்தது”என்று தெரிவித்தார்.