
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் சதுர்வேதி அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீறினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் ஸ்ரீ ராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சாமியார் வெங்கட சரவணன் என்ற எஸ்.ஏ.ஆர் பிரசன்ன வேங்கடாச்சாரியார் சதுர்வேதி. இவர், அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் இருந்தார். இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர், சென்னை காவல்துறையில் புகார் மனு அளித்தார். அதில் சதுர்வேதி தன்னுடைய மனைவி, மகளை மயக்கி கடத்தி சதுர்வேதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று தெரிவித்திருந்தார்.