
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 27) விஜய் ஆண்டனி, “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்த்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— vijayantony (@vijayantony) April 27, 2025
அதேசமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்த மனிதம் வளர்ப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.
— vijayantony (@vijayantony) April 28, 2025
இந்நிலையில் மீண்டும் ஒரு பதிவைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையைச் செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையைச் சிதைப்பதே ஆகும்.
இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையைப் பாதுகாப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…