
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த யூடியூப் சேனல்கள், மத உணர்வைத் தூண்டும் வகையிலும், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலும் தகவல்களைப் பரப்புவதால் இந்த யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களான DAWN, SAMMA TV, ARY NEWS, GEO NEWS உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயாப் அக்தரின் ‘100mph’ என்ற சானலும் அடக்கம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs