
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி கூறியிருந்தார். இதற்கு மக்களவை உறுப்பினர் அசதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புக்கு தனது கண்டனத்தையும் கூறியுள்ளார்.
“பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களின் மதம் என்ன என கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கொடுஞ்செயலை செய்த நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவகள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மற்றொரு பிரிவாகவே அறியப்படுவீர்கள். அப்பாவி மக்களின் மத ரீதியான நம்பிக்கை என்ன என கேட்டு அவர்களை கொல்வது இஸ்லாமியத்தில் இல்லவே இல்லை.