
சென்னை: கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சைதை மேற்கு பகுதி 140-வது வார்டில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்கா ரூ.3.64 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: