• April 27, 2025
  • NewsEditor
  • 0

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து தோல்வியடைந்தது.

MI vs LSG – ஹர்திக் பாண்டியா – ரிஷப் பண்ட்

தோல்விக்குப் பின்னர் பேசிய லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், “முதலில் பந்துவீசுவது சரியான முடிவு என்று நாங்கள் உணர்ந்தோம். ஆனாலும், இன்று எங்களுக்கான நாள் இல்லை. எதிரணி நன்றாக விளையாடியது. உங்களை நீங்களே கேள்விகேட்பதற்குப் பதில், அவர்களுக்கு கிரெடிட் தரவேண்டும். ஒரு அணியாகப் பின்னடைவு எங்களுக்கு இருக்கிறது. சரியான இடைவெளி இருப்பதால் அதை எங்களால் சரிசெய்ய முடியும்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

அதைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் (தனது அவுட் ஆஃப் ஃபார்ம் பேட்டிங்) எளிமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற சீசனில், எதுவும் உங்கள் வழியில் நடக்காதபோது, ஒரு வீரராக நீங்களே உங்களைக் கேள்விகேட்கத் தொடங்குவீர்கள். ஆனால், அணி நன்றாகச் செயல்படும்போது அதைப்பற்றித்தான் சிந்திக்க வேண்டும். இதுவொரு அணி விளையாட்டு. இதில் ஒவ்வொருமுறையும் ஒரு தனிநபரைக் குறிப்பிடுவது சரியானது அல்ல என்று நினைக்கிறேன்.” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *