• April 27, 2025
  • NewsEditor
  • 0

இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விமானத்தில் பயணித்து வந்த ஆண் பயணி ஒருவர் தனது உடைமையில் போதை பொருட்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதனை சோதனை செய்த போது அதில் ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பயணி கடத்தி வந்த உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா

கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 9.9 கிலோ ஆகும். சர்வதேச சந்தையில் அதன் மொத்த மதிப்பு ரூபாய் 10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி விமான நிலையத்தில் ரூ 10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும் விமானங்களில் இதுபோன்று போதைப் பொருட்கள், தங்கம், சிகரெட், கரன்சிகள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *