
அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும், சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவுவதாகவும் அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாகவும் அமைய வேண்டும் என்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
'நான் முதல்வன்' திட்டம் மற்றும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் 50 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: