
ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஒரு ஆவணம்; நாங்கள் அதை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் உமர் அப்துல்லா நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.