• April 26, 2025
  • NewsEditor
  • 0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐ.பி.எல் சீசனில் முதல் முறையாகத் தனது சொந்த மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) வெற்றிபெற்றது. ராஜஸ்தானுக்கெதிரான இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. இதில், 70 ரன்கள் அடித்த கோலி, இந்த சீசனில் முதல் பேட்டிங்கில் தனது முதல் அரைசதமாக இதைப் பதிவுசெய்தார்.

விராட் கோலி

அடுத்த பேட்டிங் இறங்கிய ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தபோதும், அடுத்த 12 பந்துகளில் 18 ரன்கள் அடிக்க முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. இதில், குஜராத்தும், டெல்லியும் 8 போட்டிகள் விளையாடி அதே 12 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.

இந்த நிலையில், விராட் கோலியின் ஃபார்மை பாராட்டியிருக்கும் இந்தியா மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி சீக்கிரமாக ஓய்வுபெற்றுவிட்டார் என்று நினைக்கிறேன். இப்போது அவர் விளையாடிக்கொண்டிருக்கும் விதத்தையும், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய விதத்தையும் பார்க்கையில், 2026 டி20 உலகக் கோப்பை வரையில் அவர் விளையாடியிருக்கலாம். அவர் தனது உடற்தகுதியைப் பராமரித்த விதம், இன்னும் அவர் உச்சத்தில் இருப்பது போல் காட்டுகிறது” என்று கூறினார்.

Suresh Raina
Suresh Raina

இந்த சீசனில் கன்சிஸ்டன்சியாக அணியின் வெற்றிக்குப் பங்காற்றி வரும் கோலி, 9 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 392 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 417 ரன்களுடன் ஆரஞ்சு நிற தொப்பியைத் தன்வசம் வைத்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *