
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கிளை நிர்வாகிகள் நியமன பணியில் உள்ள முன்னேற்றம் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: