• April 25, 2025
  • NewsEditor
  • 0

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

நிழற்குடை படக்குழு

வரும் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின்  இசைவெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார்.

அந்நிகழ்வில் தேவயானி குறித்து பேசிய சீமான் , “தேவயானி நடித்தால் நல்ல கதையாகவும், படமாகவும்தான் இருக்கும் என்று மக்களிடம் ஒரு கருத்துப் பதிவு இருக்கிறது. அதற்கு காரணம் அவர் தேர்வு செய்து நடித்தக் கதாபாத்திரங்கள். ‘சூர்யவம்சம்’, ‘காதல் கோட்டை’ என்று ஒவ்வொரு காலத்திலும் ஒரு படத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

காசுக்காக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அந்த நற்பெயர்தான் 30 வருடங்களுக்கு பிறகு அவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார். 

`சாதித்தப் பிறகும்…’

தொடர்ந்து பேசிய அவர், “நிறைய கலைஞர்கள் இந்தத் சினிமாத் திரைதுறைக்கு வந்து வென்றிருக்கிறார்கள். ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்து பேசினேன். இரண்டரை மணி நேரம் பேசியிருப்பேன். பல படங்கள் நடித்து சாதித்தப் பிறகும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று  அவருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

சீமான்

அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது. சோம்பேறிகள் கூட அவர் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்தால் இயங்கிவிடுவார்கள்.

இந்த மாதிரியான தேடலும், வெறியும் இருக்கின்ற ஒவ்வொருவரும் உச்சத்தைத் தொடலாம். சாதிக்கலாம்.  இந்தப் படைப்பில் (நிழற்குடை) நிறைய பேர் பங்காற்றி இருக்கிறார்கள் அவர்களும் நிச்சயம் சாதிப்பார்கள்” என்று பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *