• April 25, 2025
  • NewsEditor
  • 0

‘பெங்களூரு vs ராஜஸ்தான்!’

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

Virat Kohli

பெங்களூரு சார்பில் விராட் கோலி 42 பந்துகளில் 70 ரன்களை அடித்திருந்தார். கோலியின் பேட்டிங் பெங்களூரு அணி 200 ரன்களை கடக்க பெரிதாக உதவியது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி சின்னசாமி மைதானத்தில் வெல்ல என்னவெல்லாம் மெனக்கெடல்களை செய்தார்கள் எனப் பேசியிருக்கிறார்.

‘திட்டத்தை விளக்கும் கோலி!’

விராட் கோலி பேசியதாவது, ‘இன்று ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். மூன்று போட்டிகளாக சின்னசாமி மைதானத்தில் நன்றாக ஆடவில்லலை. எங்களின் பேட்டிங் யூனிட் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூடி பேசினோம். எதாவது ஒரு வீரர் முழுமையாக நின்று ஆட மற்ற வீரர்கள் அவரை சுற்றி அட்டாக்கிங்காக ஆட வேண்டும் என்பதுதான் திட்டம்.

Virat Kohli
Virat Kohli

ராஜஸ்தான் அணியின் வீரர்களும் நன்றாகவே ஆடினார்கள். டாஸை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களுக்கான பெரிய சவாலாக இருந்தது. இங்கே கடந்த போட்டிகளில் நாங்கள் 25-30 ரன்களை குறைவாக எடுத்திருந்தோம். இன்று நாங்கள் 200 ரன்களை கடந்து விட்டோம். முதல் சில ஓவர்களில் பந்து நல்ல வேகமாகவும் பவுன்சோடும் வரும்.

கடந்த 3 போட்டிகளிலும் இந்த சமயத்தில் கடுமையாக முயன்று ஷாட்களை ஆடியிருப்போம். அதனால் விக்கெட்டுகளை இழந்தோம். இன்று கொஞ்சம் நின்று பந்தை பார்த்து நேரமெடுத்து பீல்டில் இடைவெளியை பார்த்து ஆட வேண்டும் என்று அணியின் வீரர்களிடம் கூறியிருந்தேன்.

ஐ.பி.எல் போட்டிகளை ஆட சிறந்த இடம் சின்னசாமி மைதானம்தான். இந்த ரசிகர்கள் எங்களின் வெற்றி, தோல்வி என எல்லா சமயங்களிலும் உடன் நின்றிருக்கிறார்கள். இது எனக்கு எப்பவுமே ஸ்பெசலான இடம்தான். நிறைய மகிழ்வான இங்கே நினைவுகளும் இருக்கிறது.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *