
பெங்களூரு: ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த பெங்களூருவை சேர்ந்த பாரத் பூஷனின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மஞ்சுநாத் ராவ், பாரத் பூஷன், மஞ்சுநாத் சோம் ஷெட்டி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டன.