
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த வாரம் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றிருந்தது.
அங்கு சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சிவக்குமார் ஆகியோர் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகியிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
இதை தாண்டி தற்போது படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களில் பிஸியாக இயங்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
அப்படி ஒரு நேர்காணலில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் தொடர்பாக அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கியிருந்த ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜுடையதுதான்.
கடந்த ஜனவரி வெளியாகியிருந்த இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்குகளில் சோபிக்கவில்லை.
அந்தப் பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ், ” ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ஒன்லைனை நான் ஷங்கர் சாரிடம் கூறியிருந்தேன்.
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசியல்வாதியாக மாறுகிறார் என்பதை கதையாகக் கொடுத்திருந்தேன்.
அந்தக் கதையை ஷங்கர் சார் எவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்போகிறார் என்பதை எண்ணி ஆவலுடன் காத்திருந்தேன்.
இதுதான் நான் கொடுத்த கதையின் உலகம். ஆனால், படம் வித்தியாசமான உலகத்தைக் கொண்டதாக வந்திருந்தது.
கதையில் பல கதாசிரியர்களின் ஈடுபாடு இருந்தது. திரைக்கதை பெரிதளவில் மாற்றப்பட்டது.
கதையும் சிறிதளவில் மாற்றத்தை எட்டியிருந்தது. திரைப்படங்களில் இப்படியான விஷயங்கள் க்ளிக் ஆகும் என்பதை கணிக்க முடியாது.
அது போல, ஒரு திரைப்படம் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதையும் சொல்ல முடியாது.” எனக் கூறியிருகிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
