
அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்ரன் தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவுக்காகத்தான் சற்று பதற்றத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினர் பேசுவதை விட, படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.