• April 24, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நாங்கள் (நானும் என் கணவரும்) சியோல் (தென் கொரியா ) சென்றிருந்த பொழுது எங்களைக் கவர்ந்த ஒரு விஷயம் ஸ்டார்ஃபீல்ட் பிரமாண்ட நூலகம்.

இதுவரை இப்படி ஒரு நூலகத்தை நான் பார்த்ததே இல்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இதில் புத்தகத்தை எப்படி எடுப்பார்கள். நீங்கள் புகைப்படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் அந்த சந்தேகம் வரும்.

நாங்கள் அங்கு உள்ளவர்களிடம் கேட்டது. இதிலிருந்து புத்தகத்தை எப்படி எடுக்கிறார்கள்? அவர்கள் சொன்னதை நாங்கள் புரிந்து கொண்டது ஏணி வைத்து. ஏன் என்றால் அங்கு மொழிப் பிரச்னை மிக மோசம்.

அந்த நூலகம் ஒரு மாலுக்குள் இருக்கிறது. மாலில் நிறைய அதிசயங்கள் உள்ளன. அதில் ஒரு அதிசயம்தான் இந்த நூலகம்.

கங்னமில் உள்ள பரபரப்பான COEX மாலின் மையத்தில் ஒரு வசதியான தங்குமிடமாக இருந்த இந்த நூலகம், சியோல்வாசிகளுக்கு ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், சந்திப்பு இடமாகவும் மாறியது.

ஸ்டார்ஃபீல்ட் நூலகத்தில், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட வாசிப்புப் பகுதிகளுக்குள் உள்ள அலமாரிகளிலிருந்து புத்தகங்களைச் சுதந்திரமாகப் பார்த்துப் படிக்கலாம். ஆனால் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை.

தென் கொரியாவின் சியோலில் உள்ள ஸ்டார்ஃபீல்ட் நூலகம் ஷின்சேகே குழுமத்தால் உருவாக்கப்பட்டது.

இது உயரமான புத்தக அலமாரிகளுடன் கூடிய தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கும் ஒரு பிரபலமான இடமாகும்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *