• April 22, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் கடந்த சில மாதங்களாக கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர், `அஜித் குமார் ரேஸிங்’ என்ற பெயரில் கார் ரேஸ் அணி வைத்திருக்கிறார். கடந்த ஜனவரியில் துபாயில் நடைபெற்ற 24H ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி, 922 போர்ஷே பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மாதம் இத்தாலியில் நடந்த 12H முகெல்லோ சாம்பியன்ஷிப்பில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாம் பிடித்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 20), பெல்ஜியம் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் (Circuit of Spa-Francorchamps) கார் ரேஸில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

கார் ரேஸில் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் தொடர்ச்சியாகப் பெருமை சேர்த்துவரும் அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் அணிக்கு பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில், “ரேஸிங் முதல் வெற்றிவரை உங்களின் ஆதரவின்றி இதைச் செய்திருக்க முடியாது. ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் ரேஸில் இரண்டாம். இதைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று அஜித் குமார் நன்றி தெரிவித்திருக்கிறார். இதனை, அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *