• April 22, 2025
  • NewsEditor
  • 0

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனியார் ஊடகம் ஒன்றிருக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் மும்பையின் கடுமையானப் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், ” நான் பகலில் பயணம் செய்வதில்லை. நான் ஒரு இரவு நேரப் பறவை. இரவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. அந்த நேரத்தில் எளிதாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

ஏ.ஆர். ரஹ்மான்

அதனால் நான் அப்போதுதான் பயணம் செய்வேன். சில நேரம் அதிகாலையிலேயே தர்காவிற்குச் சென்றுவிட்டு, வந்து தூங்கிவிடுவேன். இது என் வழக்கமாகவே உள்ளது. இரவில் தூங்கி காலையில் எழுவது எனக்கு சலிப்பாக இருக்கிறது. பொதுவாக, நான் அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து காலை 7 மணிக்கு தூங்குகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இசை ஜாம்பவான்கள் எல்லோரும் இப்படிதான் செய்கிறார்கள் போல..!

அதே நேர்காணலில் மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கர் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ” நாங்கள் 2006-ல் ஹைதராபாத்தில் லதா ஜி அறக்கட்டளையுடன் ஒரு கச்சேரி செய்தோம். கச்சேரிக்கு முன், யாரோ பயிற்சி செய்வதை நான் கேட்டேன். லதா ஜி உள்ளே ஒரு ஹார்மோனியத்துடன் பயிற்சி செய்துக்கொண்டிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் - லதா மங்கேஷ்கர்
ஏ.ஆர்.ரஹ்மான் – லதா மங்கேஷ்கர்

அவர் ஏன் பயிற்சி செய்ய வேண்டும்? அவர் லதா மங்கேஷ்கர் என்று நான் நினைத்தேன். ஆனால் இசை ஜாம்பவான்கள் எல்லோரும் இப்படிதான் செய்கிறார்கள் போல என்று எண்ணி அப்போது இருந்துதான் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். இப்போது நான் சுமார் 30-40 நிமிடங்கள் பயிற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *