
‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை ‘லிஃப்ட்’ இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இடா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்துள் ளார். வடசென்னை பின்னணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இதன் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரத்தம் தெறிக்க ஹரிஷ் கல்யாண் நிற்கும் அந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்று வருகிறது.