• April 21, 2025
  • NewsEditor
  • 0

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். அந்தவகையில் சமீபத்தில் துபாயில் நடந்த 24H ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது.

Ajith Kumar Racing

இதனைத்தொடர்ந்து அஜித் குமாரின் ரேஸிங் அணி பெல்ஜியம் நாட்டில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் என்ற பந்தயத்தில் பங்கேற்றது. இந்த பந்தயத்தில் அஜித் குமாரின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது.

இதுகுறித்து அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “இந்திய மோட்டார் விளையாட்டுக்கு ஒரு பெருமையான தருணம். பெல்ஜியத்தில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் பந்தயத்தில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் குறிப்பிடத்தக்க P2 Podium Finish செய்தனர். உலகளாவிய பந்தய அரங்கில் ஆர்வம், விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று” என்று பதிவிட்டுள்ளார்.

Ajith Kumar Racing
Ajith Kumar Racing

கார் பந்தயத்தில் வென்றதைக் கொண்டாடும் அஜித்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் அஜித்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *