
வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.
இதையடுத்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.
இந்நிலையில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், `மண்டாடி’ எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் டைட்டில் வெளியிடப்பட்டு படத்திற்கான அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடைமண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பங்களிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் நடிகர் சூரி, “இப்படத்தின் ஆரம்பத்திலேயே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவே பிரமாண்டாமாக நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் ரொம்ப கொடுத்து வச்சவன். இது எல்லாத்துக்கும் காரணம் வெற்றிமாறன் அண்ணன்தான். எல்லா மேடைகளிலும் இதை நான் சொல்லுவேன்.
சுசீந்திரன் அண்ணன் எனக்கு வாய்ப்புக் கொடுத்து பல படங்களில் நடித்தேன். அதற்குப் பிறகு வெற்றிமாறன் அண்ணன் என் மீது வைத்த நம்பிக்கையில், அவர் கொடுத்த வாய்ப்பில் கதைநாயகனாக மாறியிருக்கிறேன்.
சம்பாரிச்ச பணம் போதும். இனிமேல் நல்ல படங்கள் மட்டும்தான்
பெயின்டராக இருந்து நடிகராக மாறி இதுவரைக்கு என் தகுதிக்கு மீறி நல்லா சம்பார்ச்சிட்டேன். இனி எனக்குப் பிடிச்ச மாதிரி, நல்ல நல்ல கதையுடன் படங்கள் பண்ணினா போதும்.
கலைத்தாய் எனக்கு வாய்ப்புகள் கொடுத்த நல்லா வச்சிருந்தாலே போதும். எல்ரெட் குமார் அண்ணோட திரும்ப திரும்ப வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷம்.
எல்லா படத்திலும் துணையாக நிற்கிறார் வெற்றிமாறன் அண்ணன்
‘விடுதலை’ வெற்றிமாறன் அண்ணனால சிறப்பாக அமைஞ்சது. அதுக்கு அப்றம் ‘கருடன்’ படமும் அவர் மூலமாக, அவரோட நிறைய பங்களிப்பில் சிறப்பாக அமைஞ்சது.
இப்போது இந்தப் படமும் அவர் மூலமாக, அவரோட பங்களிப்பில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு எப்பவும் துணையாக இருக்கார் வெற்றி அண்ணன்.

‘மாமன்’ படத்தோட கதைக்கூட வெற்றிமாறன் அண்ணன்கிட்ட சொன்னேன். அவர் சில விஷயங்களை மாற்ற வேண்டும் எனப் பல அறிவுரைகளைக் கொடுத்து, “இந்தப் படம் நல்லா வரும். நல்ல குடும்பக் கதை, எல்லோருக்கும் பிடிக்கும்” என்று சொன்ன பிறகுதான் நடிச்சேன்.
இந்தப் படத்திலயும் அவரது நிறைய அறிவுரைகளைக் கேட்பேன். இந்தப் படமும் சிறப்பாக எனக்கு அமையும்.
ஜி.பி.பிரகாஷ்தான் மியூசிக் பண்ணனும்
‘கருடன்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைக்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன், நடக்கல. ‘மாமன்’ படத்துக்கும் ரொம்ப முயற்சி செய்தேன், அது எதுவும் நடக்கல. இப்போ இந்தப் படத்துல அது நிறைவேறி இருக்கு.

ஜல்லிக்கட்டு மாதிரிதான் பாய்மரப் போட்டியும்
ஜல்லுக்கட்டு மாதிரிதான் பாய்மரப் போட்டியும். அலைகளோட மல்லுக் கட்டி, கடலில் நடக்கும் வீரமிக்கப் போட்டியைக் கதையாக எடுக்க நினைத்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தி அண்ணனுக்கு நன்றி.
கடல் சார்ந்த மக்களின் வீரமிக்கப் போட்டியைத் திரையில் கொண்டு வந்து, எல்லோருக்கும் சொல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு மாதிரி நம் தமிழ் மக்களின் வீரமிக்க விளையாட்டு இது.
இதைத் திரைபடமாக எடுக்கிறோம். முதலில் அம்மக்களுக்கு எங்களுடைய நன்றியைச் சொல்லி இப்படத்தைத் தொடங்குகிறோம்.” என்று பேசியிருக்கிறார் நடிகர் சூரி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…