
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் முன்பு ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
ஆனால், படத்தின் 15 சதவீத படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இப்படத்தைத் தனுஷ் இயக்கி வருகிறார்.
படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு செட் அமைத்திருக்கிறார்கள்.

ஆண்டிப்பட்டி பகுதியில் அமைத்த இந்த செட் பிரிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. நேற்றிரவு இந்த செட்டில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்றின் காரணமாக செட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் தீ பரவியிருக்கிறது.
அருகிலிருந்த மக்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இந்தப் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் எவருக்கும் எந்த சேதமும் இல்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…