
‘சங்கமித்ரா’ படப் பணிகள் எப்போது தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு இயக்குநர் சுந்தர்.சி பதிலளித்துள்ளார்.
‘கேங்கர்ஸ்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதில் ‘சங்கமித்ரா’ படம் குறித்து சுந்தர்.சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுந்தர்.சி, “அநேகமாக அடுத்த ஆண்டு தொடங்கும் என நினைக்கிறேன். இப்போது அப்படத்தை எப்போது தொடங்கலாம் என்ற முடிவு என்னிடம்தான் இருக்கிறது. அந்தளவுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது.