
கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், ‘காலேஜ் ரோடு’ படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், அடுத்து நடித்துள்ள படம், ‘என் காதலே’. பிரிட்டிஷ் நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் நாயகிகளாக நடித்துள்ளனர். காட்பாடி ராஜன், மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டோனி ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாண்டி சாண்டெல்லோ இசை அமைத்துள்ளார். ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை எழுதி ஜெயலட்சுமி இயக்கியிருக்கிறார்.
அவர் கூறும்போது, “லண்டனிலிருந்து தமிழ்க் கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வரும் நாயகி லியாவிற்கு லிங்கேஷ் மீது காதல் வருகிறது. அந்த காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார், அவர். இறுதியில் லியாவின் ஆராய்ச்சி என்ன ஆனது? காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை உணர்ச்சிபூர்வமாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.