
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ படத்தில் நடித்துள்ளா பூஜா ஹெக்டே.
இந்த படத்தில் இடம்பெற்ற துள்ளலான கனிமா பாடல் மூலம் இணையத்தைக் கலக்கியுள்ளார்.
சில ஆண்டுகள் முன்பு வரை தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம்வந்த பூஜா, 2022-ம் ஆண்டு முதல் ஏன் தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்பது குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நான் புதிதாக எதாவது முயற்சிக்க விரும்பினேன். வெறும் ஆசைக்காக மட்டும் ஒரு படத்தில் இணைய வேண்டாம் என நினைத்தேன்.
ஒரு நல்ல கதையில், கதாப்பாத்திரத்தில் இணைய வேண்டும் என நினைத்தேன். வேலையில் உற்சாகமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதுதான் காரணம் வேறொன்றும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு சினிமாவில் இருந்து அழைப்புகள் வந்ததாகவும் பேசியுள்ளார். “ஏதேதோ காரணங்களுக்காக, அவற்றில் இணைவது சரியாக இருக்கும் எனத் தோன்றவில்லை.” என்றார்.
இப்போதைய லைன் அப்பில் தமிழ் மற்றும் இந்தியில் சுவாரஸ்யமான கதைகள் உள்ளதாக கூறியவர், இந்த ஆண்டு மீண்டும் தெலுங்குக்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய தெலுங்கு படம் பற்றி பேசுகையில், “நான் தெலுங்கு சினிமாவில் தொலைந்துபோன குழந்தை போல உணர்ந்தேன். இப்போது புதிய தெலுங்கு படத்துக்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன்.
இந்த படத்தின் தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. தேதிகள் முடிவானதும் உங்களுக்கு இது என்ன படம் எனத் தெரியவரும்.” எனக் கூறியுள்ளார்.

Pooja Hegde’s Lineups
சமீபத்தில் பூஜா, சாஹித் கபூருடன் நடித்த தேவா திரைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக வருண் தவானுடன், ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ என்ற படத்தில் இணையவுள்ளார்.
ரெட்ரோ திரைப்படம் வரும் மே மாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.