
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பிறவி கோழைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.
சென்னையில் பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: நான் புகழ்பெற்ற நடிகராக இருந்தால், அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை தொண்டராக்கிக் கொண்டு, உடனடியாக கட்டமைப்பை உருவாக்கலாம். எந்த பின்புலமும் இல்லாத நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கு பெறும் ஒரே கட்சி நாம் தமிழர் தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்ற திமுகவை விட பல்வேறு வாக்குச்சாவடிகளில் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. இங்கு மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் தான்.