
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் தவெகவினர் அவர்கள் கட்சிக் கொடியை காட்டுகிறார்கள். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் அமைதியாக இருந்தபோது விஜய்க்காக முதல் குரல் கொடுத்தது எங்க பொதுச்செயலாளர்தான். அந்த பாசத்துல, ‘எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் சூழலை எடுத்துச் சொன்னவர் பழனிசாமிதான்,’’ என்று அவரது கூட்டத்திற்கு வந்து அவரை வரவேற்று கொடியை காட்டினோம் என தவெக தொண்டர்களே கூறுகிறார்கள்.
தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோலதான் விஜயின் ஆதரவு கிடைக்காததால் டிடிவி.தினகரன் அதிமுகவை விமர்சிக்கிறார். இன்னொரு கட்சி கொடியை பிடிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி எங்கள் கட்சி கிடையாது. எங்க கட்சிக்காரங்க எங்க கட்சிக் கொடியவே தூக்கமாட்டாங்க, இதுல அடுத்த கட்சி கொடிய பிடித்து ஆட்டுவோமா?, ஜெயலலிதா அம்மா இருந்த போது சில இடங்களில் கூட்டங்களில் எங்க அம்மாவே எங்ககிட்ட சொல்வாங்க, ஏம்பா நம்ம ஆளுங்க கொடியவே தூக்கமாட்டேங்கிறாங்க, பூரா கொடியும் கூட்டணிக் கட்சி கொடியா இருக்குனு வருத்தப்படுவாங்க,’’ என்றார்