
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழா இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது. ஸ்டாலின் அனைவருக்கும் விருது வழங்கி கெளரவித்தார்.
2021ஆம் ஆண்டுக்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்காக நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
2023ஆம் ஆண்டுக்காக நடிகர் மணிகண்டன், நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
அண்ணாவிடம் கலைஞர் பெற்ற கலைமாமணி விருதை இன்று நீங்களும் பெற்றுள்ளீர்கள். இளம் கலைஞர்கள் 90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார், இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.
மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பிலே நடைபெறக்கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு தலைசிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது உழைப்புக்கு அங்கீகாரம்தான் இந்த விருது.

“இளையராஜா பாராட்டு விழாவில் ‘என் மேல் ஏன் இவ்வளவு பாசம்?’ எனக் கேட்டார். அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம்” என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.