
சென்னை: நம்முடைய முதலமைச்சரும் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்திருக்கின்றவர்தான். இன்றைக்கும், இசையையும், நாடகங்களையும், திரைப்படங்களையும் ரசிக்கக் கூடியவர் தான் நம்முடைய முதலமைச்சர். எனவே தான், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் நடத்துகின்ற அத்தனை நிகழ்ச்சிகளையும், அதனுடைய செயல்பாடுகளையும் தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தி வருகின்றார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.