• October 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் அடுத்த மாதம் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறுகிறது. வாக்கு எண்​ணிக்கை 14-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் இந்​தியா டுடே சார்​பில் பிஹாரில் தேர்​தலுக்கு முந்​தைய கருத்​துக் கணிப்பு நடத்​தப்​பட்​டது. அதன் முடிவு​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன. அதில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்ட வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்​கை​யால், தே.ஜ கூட்​டணி பலனடை​யும் வாய்ப்​பு​கள் உள்​ள​தாக தெரிய வரு​கிறது.

பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தளம் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு இந்த தேர்​தலில் வெற்றி வாய்ப்​புள்​ள​தாக 46 சதவீதம் பேர் கருத்து தெரி​வித்​துள்​ளனர். ராஷ்டிரிய ஜனதா தளம் தலை​மையி​லான மெகா கூட்​டணி 21.7 சதவீத வாக்​கு​களு​டன் 2-வது இடத்​தில் உள்​ளது. இவ்​வாறு இந்​தியா டுடே கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *