
புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.