• October 12, 2025
  • NewsEditor
  • 0

பத்தனம்திட்டா: கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளின் தங்க கவசங்​கள் கடந்த 2019-ல் செப்​பனிடப்​பட்​டன. அப்​போது அதிலிருந்து சுமார் 4 கிலோ தங்​கம் மாய​மானது பின்​னர் தெரிய​வந்​தது. இதுகுறித்து கேரள உயர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் வாரி​ய தலை​வர் பி.எஸ்​.பிர​சாந்த் நேற்று கூறிய​தாவது: தங்​கம் மாய​மான விவ​காரத்​தில் தேவஸ்​வம் துணை ஆணை​யர் பி.​மு​ராரி பாபுவுக்கு எதி​ராக ஏற்​கெனவே நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. அவர் இதற்கு முன் சபரிமலை​யில் டிடிபி நிர்​வாக அதி​காரி​யாக இருந்​துள்​ளார். 9 அதி​காரி​களின் தவறுகளை விஜிலென்ஸ் கண்​டறிந்​துள்​ளது. முராரி பாபு மீது ஏற்​கெனவே நடவடிக்கை எடுத்​துள்​ளோம். மற்ற அதி​காரி​கள் மீதான நடவடிக்கை குறித்து அக்​டோபர் 14-ம் தேதி நடை​பெறும் டிடிபி கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *