
சென்னை: டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் அனுமதி வழங்கக்கோரி தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர்.