
விருதுநகர்: “ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறில் இன்று (11.10.2025) செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், “நம்முடைய தமிழ்நாடு அரசு ஜாதி, மதம், பாலினம், அதிகாரம் போன்றிருக்கக்கூடிய எந்தவொரு காரணத்தாலும், வேறுபாடு இல்லாத எல்லோருக்கும் எல்லாமுமான சமவாய்ப்புகளை கொண்டிருக்கக்கூடிய நியாயமான ஒரு உயர்வான முன்னேற்றமிக்க சமத்துவ, சமுதாய அமைப்பினை உருவாக்கிடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு நம்முடைய முதல்வர் தலைமையிலான இந்த திராவிட மாடல் ஆட்சி சிறப்பான திட்டங்களை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மாத்திரம் அல்லாமல், சமூக நலத் திட்டங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருவதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.