
சென்னை: தமிழ்நாட்டு வரலாற்றிலேயே 10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணையம் மூலமாக இணைத்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராம மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “முதல்வராக 3-வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன்… வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.