
புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பெண் பத்திரிகையாளர்களை பொது மன்றத்தில் இருந்து விலக்க அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மிகவும் பலவீனமானவர் என்று நீங்கள் கூறுகிறீர்களா?. நமது நாட்டில், பெண்களுக்கு எல்லா இடங்களிலும் சமமாகப் பங்கேற்க உரிமை உண்டு. இதுபோன்ற பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது நீங்கள் அமைதியாக இருப்பது பெண் சக்தி குறித்த உங்கள் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது" என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.