
புதுடெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுரேந்திரா ராஜ்புத்.
“அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார்” என இந்தி மொழியில் எக்ஸ் சமூக வலைதள பதிவில் சுரேந்திரா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.