
விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது விஜய் டிவியில் கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9.
வாட்டர் மெலன் திவாகர், வி.ஜே. பார்வதி, இயக்குநர் பிரவீன் காந்தி, இயக்குநர் அகத்தியனின் மகள் கனி உள்ளிட்ட இருபது போட்டியாளர்கள் கடந்த வாரம் நிகழ்ச்சிக்குள் சென்றார்கள்.
இவர்களில் நந்தினி மட்டும் முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்கள் என்கிறார்கள் நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரத்தில்.
மீதமுள்ள போட்டியாளர்களுடன் முதல் வார வீக் எண்ட் எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. விஜய் சேதுபதி கலந்து கொண்ட ஷூட்டிங் தற்போது நடந்து நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக முந்தைய சில சீசன்களில் முதல் வாரமென்றால் எவிக்ஷன் இல்லை என அறிவித்து சர்ப்ரைஸ் தருவார் பிக்பாஸ்.
அதுபோல் இந்த வருடமும் முதல் வார சலுகை இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இருந்தாலும் இந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
ஷூட்டிங் தொடங்கியதும் போட்டியாளர்களிடம் நலம் விசாரித்த விஜய் சேதுபதி முதல் வாரம் வீட்டில் நடந்தவை குறித்து விசாரித்தார்.
தொடர்ந்து எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.
பிக்பாஸ் ரசிகர்களிடம் இருந்து வந்த ஓட்டுகளின் அடிப்படையில் இயக்குநர் பிரவீன்காந்தி எவிக்ட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பதாகத் தெரிய வருகிறது.
பிரவீன் காந்தி எவிக்ட் ஆன எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப் படுகிறது.