
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’ முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப் முதன்மை வேடங்களில் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம், ‘நிறம்’. நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, ஸ்மேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. சான்டானியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை கிருஷ்ண பலராம் இயக்கியுள்ளார். கே ஸ்கொயர் வென்ச்சர்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிக்கிறது. இதன் இணைத் தயாரிப்பாளர் பி.ராஜேஷ்.