• October 11, 2025
  • NewsEditor
  • 0

அன்பு என்கிற சமாச்சாரம், அனைத்து பிக் பாஸ் சீசன்களிலும் படாத பாடுபடுகிறது. ‘என்னோடது மட்டுமே அக்மார்க் அன்பு’ என்று உரத்த குரலில் முழங்கிய நந்தினி, டென்ஷன் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ஒருவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன் அவர்களுக்கு ஐக்யூ முதற்கொண்டு பல்வேறு தகுதி சார்ந்த சோதனைகள் நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.

எனில் நந்தினி போன்ற படு எமோஷனலான நபரை உள்ளே அனுமதித்து விட்டு அவர்கள் மனஅழுத்தத்தில் படாத பாடுபடுவதையும் காட்டி அவர்களை காட்சிப் பொருளாக்கும் வணிகத்தை பிக் பாஸ் தொடர்ந்து செய்கிறதா என்பது பெரிய கேள்வி.

போலவே கலந்து கொள்பவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சரியாக அறிந்து கொண்டுதான் வருகிறார்களா என்பதும் இன்னொரு கேள்வி.

எப்படியோ தனக்கு கிடைத்த வாய்ப்பை நந்தினி உணர்ச்சிவசப்பட்டு உதறி எறிந்து விட்டார் என்று தோன்றுகிறது. விசாரணை நாளில் இதற்கான விடை கிடைக்கலாம்.

BB Tamil 9 Day 5

தலை மேல் தண்ணீர் விழும்படியாக பைப்பின் அடியிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்த சபரி, அதிகாலை ஆறு மணிக்கு நீர் விழத் துவங்கியதும் சட்டென்று எழுந்து கம்ருதீன் உதவியுடன் பத்து விநாடிக்குள் டாங்க்கை சரியான பொசிஷனில் தள்ளி வைத்து விட்டார். இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஹை-ஃபை எல்லாம் தந்து கொண்டார்கள்.

நேற்று பிக் பாஸிடமும் சக ஹவுஸ்மேட்ஸ்களிடமும் வாங்கிய அடி அப்படி. எப்போது வேண்டுமானாலும் எழுந்து கொள்ளலாம் என்கிற சூப்பர் டீலக்ஸ் பவரை வைத்துக் கொண்டு அந்த வீட்டார் செய்யும் அலப்பறைகள் அதிகாலையிலேயே ஆரம்பித்து விடுகின்றன.

பள்ளிக் குழந்தைகளை எழுப்புவதற்கு அல்லல்படும் பெற்றோர்கள் மாதிரி பிக் பாஸ் வீட்டார் அல்லல்பட வேண்டியிருக்கிறது.

“சுபிக்ஷா செல்லம்.. கொஞ்சம் எந்திரிச்சு வாம்மா.. பாட்டு போட்டப்புறம் மறுபடி தூங்கிடலாம்” என்று ‘நரி.. கொஞ்சம் எந்திரிச்சு ஊளையிடும்மா’ காமெடி மாதிரி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். “சுபிக்ஷா.. வாம்மா.. நாள் பூரா கிச்சன்ல நிக்கிற மாதிரி இருக்கு. தூக்கமே இல்ல. தலை சுத்துது’ என்று கெஞ்சலுடன் சலித்துக் கொண்டார் கனி. இது பெரும்பாலான இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை.

வீட்டில் ஒவ்வொருவருக்கு ஏற்ப ஒவ்வொரு நேரத்தில், சுவையில் சமையல் செய்யும் போது பொழுது பூராவும் கிச்சனில் இருப்பது போன்ற சலிப்பு வந்து விடும். வீட்டில் உள்ள மற்றவர்கள் இதைப் புரிந்து கொண்டு உதவி செய்யவில்லையென்றாலும் மேலதிக உபத்திரவம் தராமல் இருக்க வேண்டும்.

சூப்பர் டீலக்ஸ்வாசிகளுக்கு மட்டுமே சுவையான, ஸ்பெஷல் உணவு. அவர்கள் கேட்பதையெல்லாம் சமைத்துத் தர வேண்டும். அந்த வகையில் சப்பாத்திக்கு சிக்கன் வேண்டும் என்று சுபிக்ஷா கேட்டதால் “நமக்கு உணவு பத்தாமல் இருக்கு.

நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிட முடியும். இந்த லட்சணத்தில் இவளுக்கு சிக்கன் வேணுமாம்.. இருடி.. சிக்கனில் சூப்பு வைப்பேன் நினைச்சியா.. பெரிய ஆப்பாக வைக்கிறேன்’ என்று கருவிக் கொண்ட கனியக்கா, பிரவீன்ராஜ் உடன் பேசி சதி செய்து சிக்கனில் நிறைய உப்பையும் காரத்தையும் அள்ளிக் கொட்டினார்.

“நீ உப்பு போட்டாயா.. தெரியாமல் நானும் போட்டுவிட்டேனே..’ என்று இருவரும் நாடகம் ஆடியது நல்ல காமெடி. ஆசைப்பட்டு சிக்கன் கேட்ட சுபிக்ஷா, இனி தன் வாழ்நாளில் அதைச் சாப்பிட மாட்டார்.

அப்படியொரு கண்றாவியான சுவை. ‘கண்ணில் தண்ணீராய் வருது. எரியுது’ என்று செல்லமாக சலித்துக் கொண்டார் வியன்னா.

பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவதற்காகவும் கேமரா தன் மீது ஃபோகஸ் ஆவதற்காகவும் போட்டியாளர்கள் பல்வேறு கோக்குமாக்குகளை செய்வது வழக்கம்தான்.

ஆனால் கடுமையான ரேஷன் கொண்ட பிக் பாஸ் வீட்டில் உணவில் உப்பைக் கொட்டி வீணடிப்பது சரியான ஸ்ட்ராட்டஜி அல்ல. கனியக்கா இதைத் தவிர்த்திருக்கலாம்.

BB Tamil 9 Day 5
BB Tamil 9 Day 5

‘வீட்டு தல’ டாஸ்க்கின் இறுதிச் சுற்று. பரவாயில்லை. இதைக் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருந்தார்கள். ‘நீதான் தைரியமான ஆளாச்சே.. பேசித்தான் பாரேன்’ என்பதுதான் இதன் சாராம்சம்.

துஷார், ஆதிரை மற்றும் பிரவீன் ராஜ். இறுதிப் போட்டியாளர்கள். இந்த டாஸ்க்கில் யார் அதிகபட்ச துணிச்சலான முடிவை எடுக்கிறாரோ, அவரே இந்த சீசனின் முதல் ‘வீட்டுத் தலை’யாகத் தேர்வாகும் வாய்ப்பு இருக்கிறது.

‘யோசித்து ஆடுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, சீசனின் இறுதி வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என்று ஆரம்பத்திலேயே வார்னிங் கொடுத்து ஜர்க் ஆக்கினார் பிக் பாஸ். (சும்மா.. லுலுவாய்க்கு..!). ‘நாள் முழுவதும் யூனிபார்ம் அணியும்’ சேஃப் ஆன தேர்வை செய்தார் பிரவீன்ராஜ். ஏனெனில் மற்ற இரண்டு சாய்ஸ்களில் பேச முடியாது மற்றும் முகத்தைக் காட்ட முடியாது.

‘செயல்தான் முக்கியம்.. முகத்தைக் காட்டுவது முக்கியமல்ல’ என்று முகமூடி அணிந்து கொள்ளும் சாய்ஸை எடுத்தார் ஆதிரை. ‘வாய் திறந்து பேச மாட்டேன். பாடி லாங்குவேஜில் வீட்டை நிர்வகிப்பேன்’ என்கிற அதிகபட்ச ரிஸ்க்கை எடுத்தார் துஷார்.

இதர போட்டியாளர்கள் இதைப் பற்றி பேசி ‘யார் அதிக ரிஸ்க்கை எடுத்தது?” என்று தேர்வு செய்ய வேண்டும். ‘நடிகையாகும் விருப்பத்துடன் வந்திருக்கும் ஆதிரை, முகத்தை மறைத்துக் கொள்ளும் முடிவை எடுத்தது துணிச்சலான முடிவு’ என்று பிரவீன்காந்தியும் வினோத்தும் சொன்னார்கள். 

தனித்தனியாக டீம் பிரித்துக் கொண்டு வீடு முழுக்க அடித்துக் கொண்டாலும் துஷார் மீது பலருக்கும் சாஃப்ட் கார்னர் இருக்கிறது. அது மட்டுமில்லாமல், பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் வாயைத் திறக்காமல் வீட்டு ‘தல’யாக இருப்பது சிரமமானது. இந்த முடிவை எடுத்த துஷாரை பலரும் துணிச்சல்காரராக தேர்வு செய்தார்கள். எனவே இந்த சீசனின் முதல் கேப்டன் துஷார். அவருக்கென்று தனியான சிறப்பு அறை உண்டு.

BB Tamil 9 Day 5
BB Tamil 9 Day 5

வாயை மட்டுமே கட்ட வேண்டிய துஷாருக்கு, முகத்தையும் சேர்த்து மறைத்து விட்டதால், அவருக்கு ஆதரவு நிறைய சேர்ந்து விட்டது. இது பிக் பாஸ் செய்த மோசடி.

என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று வருத்தத்துடன் புலம்பிக் கொண்டிருந்த ஆதிரை, ஒரு கட்டத்தில் மாஸ்க்கை அணிந்து கொள்ள முடியாது என்று கழற்றி விட்டார். உண்மையிலேயே இதுதான் துணிச்சலான முடிவு.

ஆதிரையும் செயலுக்கு வழக்கம் போல் புறணி பேச ஆரம்பித்து விட்டார் பார்வதி. ‘அவ என்னா மச்சான். பிக் பாஸையே எதிர்த்துப் பேசறா.. இது ரத்தபூமி.. என்ன வேணா நடக்கும்ன்னு தெரிஞ்சுதானே வந்திருக்கா..’ என்றெல்லாம் சொன்ன இதே பார்வதிதான் ‘என்னால பெருக்கும் வேலை செய்ய முடியாது. என்ன வேணா பண்ணிக்கங்க’ என்று கேமரா முன்பு சொன்னார். தனக்கு வந்தால் ரத்தம், மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி. 

BB Tamil 9 Day 5
BB Tamil 9 Day 5

வினோத்தும் வியன்னாவும் சிறைக்குள் அனுப்பப்பட்டார்கள். “தண்ணிக் கஷ்டம் என்றால நீங்கள்லாம் ஒரே தட்டில சாப்பிடறீங்க.. ஆனா. பாருங்க.. இங்க எங்க ரெண்டு பேருக்கும் தனித்தனி தட்டு’ என்று பெருமையடித்துக் கொண்டார் வினோத்.

“நானும் நிறைய லாக்அப்ல இருந்திருக்கேன். இந்த ஸ்டேஷன்லதான் கொசுத் தொல்லையே இல்லை’ என்கிற சத்யராஜ் படத்தின் காமெடியைப் போல வினோத்தின் ஸ்டேட்மெண்ட் இருக்கிறது. 

‘முதன் முதலாக சிறைக்குச் செல்லும் உங்கள் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்’ என்று சொல்லி ஜோக் ஆக்கிய பார்வதி, “மேக்கப் பொருட்கள் இல்லாம எப்படி உயிர் வாழ்வே?” என்று வெறுப்பேற்றுவது போல் கேட்டு வியன்னாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார். 

பிறகு ஆரம்பித்தது அந்த சூறாவளி. யாரைத் திட்டுகிறோம் என்று தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருந்தார் நந்தினி. (எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ மொமெண்ட்!) ‘எனது அன்பை சந்தேகப்பட்டா உங்களை தொலைச்சுக் கட்டிடுவேன்.. என் அன்பை உங்களால ஜெயிக்க முடியாது. கனியக்கா.. நேத்து நீங்க ஆறுதல் சொன்னது உண்மையான அன்பு. ஆனா உணவுல உப்பு போடலாமா… ரியாலிட்டிக்காக என்னால இங்க வாழ முடியாது.. நான் போறேன்’ என்று நந்தினி ஹிஸ்டீரிக்கலாக கத்தியதைப் பார்த்து அவர் அருகே செல்லவே பலரும் தயங்கினார்கள். 

இந்த மாதிரி சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த பார்வதி “உன்னை எனக்கு மட்டும்தான் தெரியும்’ என்று பாசத்துடன் ஒட்டிக் கொள்ள “நீதான் இங்க உண்மையா இருக்கே’ என்று நந்தினி சொல்ல ‘இது போதும் .. எனக்கு’ என்று சந்தோஷமானார் பார்வதி. 

BB Tamil 9 Day 5
BB Tamil 9 Day 5

வீடு அதிரும்படி நந்தினி கத்திக் கொண்டிருப்பதற்கு, ஒரு தலைவனாக துஷார் ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால் ‘அக்கா.. நீங்க அழாதீங்கக்கா.. இவ்ள கஷ்டப்பட்டு வந்திருக்கீங்க.. நீங்க போகக்கூடாது.. அழாதீங்க. ப்ளீஸ்’ என்று ஆறுதல் சொல்ல

“இப்படி ஆயிடச்சடா.. தம்பி.. நான் என்ன செய்வேன்?’ என்று நந்தினி மீண்டும் அழ ஆரம்பிக்க, கூடவே துஷாரும் அழ ஆரம்பித்து விட்டார். 

அப்படியொரு சூழலை அவரால் ஹாண்டில் செய்ய முடியவில்லையா அல்லது தொற்று வியாதி போல அழுகை தொற்றிக் கொண்டதா என்று தெரியவில்லை. ‘முள்ளை முள்ளால் எடுக்கும் டெக்னி்க் போல’ நந்தினியின் அழுகையை, தனது அழுகையால் தடுக்க முடிவு செய்தாரோ?!

“நான் போறேன். இந்த இடத்துல என்னால இருக்க முடியாது’ என்று நந்தினி செய்த அலப்பறையை நீண்ட நேரம் வேடிக்கை பார்த்த பிக் பாஸ், ஒரு கட்டத்திற்குப் பிறகு கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தார்.

“சொல்லுங்க.. என்ன ஆச்சு?” – ‘இந்த ரியாலி்ட்டில என்னால வாழ முடியாது. என்னோடது உண்மையான அன்பு’ என்று நந்தினி சொன்ன ஸ்டேட்மெண்ட் பிக் பாஸிற்கே புரியவில்லை. 

BB Tamil 9 Day 5
BB Tamil 9 Day 5

பொதுவாக வெளியேற முடிவு செய்யும் போட்டியாளரை நிறைய கன்வின்ஸ் செய்து சமாதானப்படுத்துவதுதான் பிக் பாஸ் ஸ்டைல். ஆனால் இப்போது அவரே டயர்ட் ஆகி விட்டாரோ, என்னமோ. ‘சரி இடது பக்கமா கதவு இருக்கு’ என்று இந்தப் பிரச்சினையை லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து நந்தினியை வெளியே அனுப்பினார். 

இன்று விசாரணை நாள். சிக்கனில் ஆப்பு வைத்தது முதல் பார்வதியின் ராவடி வரை பல விஷயங்கள் பேசப்படும். அப்போது நந்தினியின் பிரச்னையும் விரிவாக அலசப்படும் என்று எதிர்பார்ப்போம். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *