
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (38). ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது மனைவி சரண்யா (35). (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6ஆம் வகுப்பு படிக்கும் ஓவியா (12), மூன்றாம் வகுப்பு படிக்கும் கீர்த்தி (8) என்ற மகள்களும், ஈஸ்வரன் (5) என்ற மகனும் இருந்தனர்.
சரண்யா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதில், மன்னார்குடியை சேர்ந்த ஒரு இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது.
இதையடுத்து கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றவர் அந்த இளைஞருடன் திருமண மீறிய உறவில் இருந்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார், மது உள்ளிட்ட போதை பொருள்களுக்கு அடிமையானார். வேலைக்கு செல்வதால் குழந்தைகளையும் சரி வர கவனிக்க முடியாமல் இருந்துள்ளார்.
வினோத்குமார் நித்யாவை அடிக்கடி என்னோடு வந்துவிடு, பிள்ளைகள் அம்மா எங்கே என்று கேட்கிறார்கள் என அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை. நேற்றும் நேரில் சென்று நித்யாவை அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போதும் அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்ற வினோத்குமார், மாலைக்கு மேல் வீட்டுக்கு வரும் போது மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்கிறார்கள்.
மூன்று பிள்ளைகளுக்கும் டீ கடையில் பக்கோடா பொட்டலம் வாங்கி வந்து கொடுத்து சாப்பிட கொடுத்துள்ளார். அந்த பக்கோடாவை கூட பிள்ளைகள் முழுசாக சாப்பிட்டு முடிக்கவில்லை. அதற்குள் இப்படி ஒரு வெறிச்செயலை செய்வதற்கு எப்படி தான் மனசு வந்ததோ தெரியவில்லை என அக்கம் பக்கத்தினர் சொல்கிறார்கள்.
தன் கையால் மகள்கள் மற்றும் மகனுக்கும் ஊட்டி விட்டுள்ளார். அப்புறம் இரண்டு மகள்களையும் வெளியே விளையாட சொல்லி விட்டு மகனை தன் மடியில் படுக்க வைத்து தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு மகள்களை அழைத்துள்ளார். தம்பி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து மகள்கள் அலறியுள்ளனர். அதன் பிறகு அவர்களைப் பிடித்து அறுத்துக் கொலை செய்துள்ளார்.
மூன்று பேரின் உடல்களையும் வரிசையாகப் போட்டுவிட்டு உறவினர்கள் சிலருக்கு போன் செய்து என் பிள்ளைகளைக் கொன்றுவிட்டேன் எனச் சொல்ல அவர்கள் அதிர்ந்து கதறியுள்ளனர்.

இதையடுத்து இரவு எட்டு மணியளவில் மதுக்கூர் காவல் நிலையத்துக்குச் சென்ற வினோத்குமார் தன் மூன்று பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டதாகச் சொல்ல போலீஸாருக்கே பகீர் அடைந்துள்ளது.
இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் மதுக்கூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.