• October 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உ.பி. அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத்
பல்​கலைக்கழகம் நடத்​துகிறது.

இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் (26 லட்​சம் அகல் விளக்​கு​கள்) சாதனை முறியடிக்​கப்பட உள்​ளது. இவ்​விளக்​கு​கள் சரயு நதி​யின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களில் ஒளிர உள்​ளன. தீபாவளிக்கு தமிழகத்​தில் நரகாசுரன் காரண​மானதைப் போல், உ.பி.​யில் ராமர் போருக்​குப் பின் அயோத்தி திரும்​பியதன்
நினை​வாக தீபாவளி பண்​டிகை கொண்​டாடப்​படு​கிறது. மேலும் 1,100 டிரோன்​கள் வானில் தீபாவளிக்​காக பறக்​க​விடப்பட உள்​ளன. இவற்​றில் ராமாயணத்​தின் காட்​சிகள் ஒளிப்​படங்​களாக சித்​தரிக்​கப்பட உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *