
சென்னை: இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 1-ம் தேதி மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாடு துறைக்கு கடிதம் வந்தது. அதில், கடந்த செப்.4-ம் தேதி முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் கோல்ட்ரிஃப் சிரப் குறித்த விவரம் இருந்தது.