
புதுடெல்லி: கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கை மதுரையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்போது சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தவெக தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தவெக தலைவரான விஜய்யை கடுமையாக விமர்சித்தும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.