
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவினர் (எஸ்ஐடி) தாக்கல் செய்யவேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளுக்கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்டது. இந்த சூழலில் துவார பாலகர் சிலைகளின் பீடங்களை காணவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.