
மதுரை: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார பயணத்தை மதுரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைக்கிறார்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் 3 கட்டங்களாக தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்ட பயணத்தை மதுரை அண்ணாநகரில் அக்.12-ல் தொடங்குகிறார். இதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. தூய்மை பணியாளர்களைக் கொண்டு கால்கோள் நடப்பட்டது. இவ்விழாவில், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்கம் பெருமாள், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.